Tuesday, March 15, 2011

பைசிக்கிள் தீஃவ்ஸ்

“வாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப்பிடித்தமாதிரி பிடித்த இடத்திலேயே போய் நின்று கொள்வதில்லை” என்பதை இக்கதையானது உணர்த்துகிறது.பைசிபி;க்கி;ள் தீவ்ஸ் திரைப்படம் இத்தாலி மொழியில் வெளிவந்த கலை ப்படமாகும்.பிரபல கலைப்பட இயக்குனரான வித்தோரியொ டி சில்காவின் இயக்கத்தில் வெளிவந்தது. இத்திரைப்படம் 1948ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் திகதி வெளிவந்தது. இத்திரைப்படமானது தயாரிப்பாளர் கியுசெப்பெ அமெதோ,கதை லூகி பர்த்தோலினி,சிசர்சவார்த்தினிநடிப்புலம்பேர்டர்,மக்கியோராணி,என்சோஸ்டையோலா அனைவரும் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் பைசிக்கிள் தீஃவ்ஸ் திரைப்படம். இத்திரைப்படமானது 93நிமிடங்கள் எடுக்கப்பட்டு,இத்தாலி மொழியில் வெளியிடப்பட்டது. இத்திரைப்படமே இந்தியக் கலைப்பட இயக்குனரான சத்யஜித் ராயைத் திரைப்பட இயக்குனராக மாற்றியது.
“ஒருதிருடன் உருவாகுவதற்கு என்ன காரணம் என்பதனை தெளிவாக எடுத்துக்காட்டியது. திருடனைப் பிடிதத்துக் கொடுத்தும் எந்த நடவடடிக்கையும் எடுக்காது ஒரு சமூகமே திருடனை தப்பிக்க விடுகின்றனர். ஒரு வறிய குடும்பத்தின் வறுமை நிலையினை மிகவும் தெளிவாக பார்வையாளருக்கு படம்பிடடித்து காட்டியுள்ளது.”

திரைப்படத்தின் சுருக்கக்கதை
இரண்டாம் உலக யுத்தத்தின் காலப்பகுதியில் இத்தாலி நாட்டிலில் வாழ்ந்த அந்தோனியோ வேலை செய்யும் நிறுவனத்தின் சட்டப்படி ஒரு மிதிவண்டியை வைத்திருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியமானதாகும். இந்த படத்தின் கதாநாயகன்  அந்தோனியோ ரிக்கி போருக்கு பிந்தைய பொருளாதார விழ்ச்சியடைந்த இத்தாலியில் வேலை இல்லா திண்டாட்டத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு மனச்சோர்வு மிக்க குடும்ப தலைவன்.  இரண்டு குழந்தைகளுடன் தன் மனைவியையும் காப்பாற்ற வேலைக்காக போராடிக் கொண்டிருந்த வேளையில் அவனுக்கு போஸ்டர் ஒட்டுகிற வேலை கிடைக்கிறது. ஆனால் அதற்கு அவனுக்கு ஒரு மிதிவண்டி தேவைப்படுகிறது. மிதிவண்டி இருக்கும்பட்சத்தில் அவனுக்கு இந்த வேலை உறுதியாக கிடைக்கும். அதனால் அந்தோனியோவின் மனைவியும் தம்மிடம் இருந்த பொருளை விற்று அவருக்கு மிதிவண்டியொன்றை வாங்கிக் கொடுத்தார். ஆனால் அந்த மிதிவண்டி சிறிது காலங்களிலேயே காணாமல் போய்விடுகிறது. வேலைக்கு சேர்ந்த அந்தோனியோ போஸ்டர் ஓட்டுவதற்காக தனது மிதிவண்டி மற்றும் ஏணி சகிதமாய் கிளம்பினான். ஓர் இடத்தில போஸ்டர் ஒட்டிக்கொண்டிருக்கும் போது அவனது மிதிவண்டியை ஒரு திருடன் திருடிக்கொண்டு போய்விடுகிறான். காவலர்களின் உதவியை அந்தோனியோ நாடுகிறான்இ ஆனால் அவர்கள் இந்த திருட்டை ஒரு பொருட்டாகவே கருதவில்லை அதனால் ரிக்கியும் அவனது நண்பர்களும் ரோம் நகர  தெருக்களில் தன் மிதிவண்டியை தேடி அலைகிறார்கள்.  பல மணி நேர தேடலுக்கு பிறகு மிதிவண்டி கிடைக்காததால் சோர்வுடன்  திரும்புகிறார்கள்.


 மறுநாள் அந்தோனியோவும் அவனது மகனும் ஒரு நண்பனின் உதவியோடு மிதிவண்டி மற்றும் அதன் உதிரி பாகங்கள் விற்கும் இடத்திற்கு சென்று தொலைந்த மிதிவண்டியைத் தேடுகிறார்கள். பயன் எதுவும் இல்லைஇ அந்தோனியோவின் மனைவி அவனை ஒரு குறி சொல்பவரிடம் அழைத்து சென்று அவனிடம் இருந்த கடைசி பணத்தையும் செலவழிக்கிறான்இ குறி கேட்டு திரும்பி வரும்போது மிதிவண்டி திருடியவனை அந்தோனியோ பார்க்க நேரிடுகிறதுஇ அவனை துரத்தி ஓடுகிறான். நீண்ட தூரம் துரத்தி திருடனை அவனது இல்லத்துக்கு அருகில் பிடிக்கிறான்.ஆனால் சூழ்நிலையை பார்க்கும் போது அவனது மிதிவண்டியை திருடன் விற்றுருப்பான் போலிருந்தது. இந்நிலையில் காவல்அதிகாரி துணை கொண்டு திருடனின் வீட்டில் விசாரணை நடத்துகிறார்கள். ஆனால் அங்கு மிதிவண்டியோ அதன் பாகங்களோ எதுவும் இல்லாததால் வெறும் கையேடு திரும்புகிறார்கள்.. மிகவும் மனஸ்தாபத்துடன் வேலையையும் விட்டு அவர் தனது மகனுடன் மிதிவண்டியினை தேடி அலைகின்றன. இவ்வாறு பல இடங்களில் தேடி தனது மிதிவண்டியினை திருடிய திருடனை கண்டு பிடிக்கிறான் கண்டு பிடித்தும் அத்திருடனை யாரும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் மனமுடைந்த அந்தோனியோ ஒரு மிதிவண்டியினை திருட நினைத்து திருடுகிறான் .
அதனை மிதிவண்டிக்குச் சொந்தக்காரன் பார்த்துவிட்டான.; உடனே அவன் திருடன் திருடன் எனக்கூச்சலிட்டு அந்தோனியோ வைப்பிடித்து மிதிவண்டியை பறித்துவிட்டு எல்லோருமாக சேர்ந்து அடித்து கலைக்கிறார்கள். அப்படியே மிதிவண்டியும் இன்றி வேலையுமின்றி தனது மகனுடன் செல்கிறார்.

0 comments: