This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Sunday, February 28, 2016

காயங்கள் பல கண்டும் உன்னை
மட்டுமே ஒரு இதயம் எதிர்பார்கிறது
என்றால் நீ கண்டிப்பாக
ஒரு அதிர்ஷ்டசாலியே...
ஆம் அவனுக்கு நீ மட்டுமே
உலகமாகிறாய் 

Tuesday, July 5, 2011

யாழ் பெருமாள் கோவில் புணர்நிர்மானம்

யாழ்...நகரப்பகுதியில்உள்ளபெருமாள்கோவில்கட்டிடங்கள்புணர்நிர்மானம்செய்யப்பட்டுவருகின்றன.வெளிநாட்டுமக்களின் நிதி உதவியுடன் ஆலய பாரிபாலனசபையின்நிர்வாகமேற்பார்வையுடன்புணர்நிர்மானம்செய்;யப்படுகின்றன.

Sunday, April 17, 2011

அங்காடித்தெரு திரைப்படம் எனது பார்வையில்.....

.

ஒரு அடுக்குமாடி பல்பொருள் அங்காடியில் பணி புரிய, திருச்செந்தூர்

அருகேயுள்ள தேரிக்காட்டில் இருந்து கொத்தடிமையாகக் கொணரப் படும் இளைஞர்களின் கதையினைச் சொல்வது மூலம் இது போன்ற நிறுவனங்களில் உள்ள மனிதாபிமானமற்ற நிர்வாகப் போக்குகளையும் மனிதர்களையும் இந்தத் திரைப்படம் மூலமாக அம்பலப் படுத்தியிருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன்.
 கருனாமூர்த்தி மற்றும் அருன்பாண்டியன் ஆகியோர் தயாரித்த இந்த படத்தை ஜங்கரன் இன்டர்னே}ஸனல் நிறுவனம் வெளியிட்டது மகேசு, அஞசலி, இயக்குனர் வெங்கடேசு மற்றும் கனாக்கானும் காலங்கள் பாண்டி ஆகியோர் முக்ககிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகை சினேகா உண்மை ரூபத்திலேயே கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இசை விஜய் ஆண்டனி மற்றும் .வி.பிரகாஸ். புpரபல எழுத்தாளர் செயமேயாகன் இந்த படத்திற்க்கான வசனங்களை எழுதியுள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவினை ரிச்சர்ட் மரியநாதனும் பெப்பிரவரி 11,2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் மார்ச் 26,2010ல் வெளியிடப்பட்டது.சென்னை ரங்கனாதன் தெருவில் உள்ள பிரமாண்டமான வணிக வளாகங்களில் பணிபுரியும் மக்களின் கொத்தடிமை வாழ்க்கை முறைமையை அடிப்படையாக கொண்டு இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெரும்பாலான காட்சிகள் அதே தெருவில் உள்ள கடைகளிலளேயே எடுக்கப்பட்டுள்ளன. மேலும் சில காட்சிகள் சென்னை மற்றும் தேனி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டு விரிந்து செல்கிறது

அங்காடித்தெரு திரைப்படம் எனது பார்வையில்......

ஒரு அடுக்குமாடி பல்பொருள் அங்காடியில் பணி புரிய, திருச்செந்தூர்

அருகேயுள்ள தேரிக்காட்டில் இருந்து கொத்தடிமையாகக் கொணரப் படும் இளைஞர்களின் கதையினைச் சொல்வது மூலம் இது போன்ற நிறுவனங்களில் உள்ள மனிதாபிமானமற்ற நிர்வாகப் போக்குகளையும் மனிதர்களையும் இந்தத் திரைப்படம் மூலமாக அம்பலப் படுத்தியிருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன்.
 கருனாமூர்த்தி மற்றும் அருன்பாண்டியன் ஆகியோர் தயாரித்த இந்த படத்தை ஜங்கரன் இன்டர்னே}ஸனல் நிறுவனம் வெளியிட்டது மகேசு, அஞசலி, இயக்குனர் வெங்கடேசு மற்றும் கனாக்கானும் காலங்கள் பாண்டி ஆகியோர் முக்ககிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகை சினேகா உண்மை ரூபத்திலேயே கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இசை விஜய் ஆண்டனி மற்றும் .வி.பிரகாஸ். புpரபல எழுத்தாளர் செயமேயாகன் இந்த படத்திற்க்கான வசனங்களை எழுதியுள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவினை ரிச்சர்ட் மரியநாதனும் பெப்பிரவரி 11,2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் மார்ச் 26,2010ல் வெளியிடப்பட்டது.சென்னை ரங்கனாதன் தெருவில் உள்ள பிரமாண்டமான வணிக வளாகங்களில் பணிபுரியும் மக்களின் கொத்தடிமை வாழ்க்கை முறைமையை அடிப்படையாக கொண்டு இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெரும்பாலான காட்சிகள் அதே தெருவில் உள்ள கடைகளிலளேயே எடுக்கப்பட்டுள்ளன. மேலும் சில காட்சிகள் சென்னை மற்றும் தேனி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டு விரிந்து செல்கிறது.

தொழிலாளரின் துயரத்தை அழகாக எடுத்து சென்றிரூக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். கதாநாயகன் மகே~; 12ம் வகுப்பு மாணவன் அவனது தந்தை விபத்தில் இறந்து போக குடும்பம வறுமை சூழ்நிலையால் தனது மேற்படிப்பை தொடர முடியாத நிலைக்கு ஆழாகின்றான். இச் சந்தர்ப்பத்தில் பெரிய கடை ஒன்றுக்கு ஆட்கள் சேர்க்கும் செய்தி அவனது காதை வந்து அடைகிறது. இச்சந்தர்ப்பத்தை பயன் படுத்தி தன் நண்பனுடன் சென்னையில் உள்ள பெரிய கடையில் வேலைக்கு சேர்கிறான். அங்கு அனைவரும் வேலைக்கு சேர்கிறான். அங்கு அனைவரும் அடிமைகளாக நடத்தப்படுவதை பார்த்து கோபமடைகிறான் ஆனாலும் வேறு வழியின்றி அங்கேயே இயந்திரமான வாழ்க்கை வாழ்கிறான். இதற்கிடையில் நாயகியின் அறிமுகம் இத் திரைப்படத்தினை பார்ப்பவர்களை கண்ணீர் விட்டு அழ வைக்கிறது. ஊழியர்களை கெட்ட வார்த்தையால் திட்டுவது, அறைக்குள் கூட்டிச் சென்று சித்ரவதை செய்வது அத்துடன் அவர்களுக்கான உணவு வழங்கும் முறை தொழிலாளர்கள் படும் வேதனையை உணர்த்தி நிற்கிறது.
நாயகன் மகே~;ம் நாயகி அஞ்சலியும் கதாபாத்திரத்தை உள்வாங்கி அழகாக தம் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறனர் அதே போன்று நண்பனாக வரும் பாண்டி நகைச்சுவையில் சிறப்பாக செயற்பட்டுள்ளான் என்றால் மிகையாகாது. நாயகன்,நாயகி மட்டுமன்றி கதாபாத்திரம் அனைத்தும் தம் நடிப்பை மிகச்சிறப்பாகவும்,யதார்த்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதே போன்று நண்பனாக வரும் பாண்டி நகைசுவையில் கலக்கி இருக்கிறார். நாயகியின் தங்கை நாய்க் கூண்டிட்குள் படுத்து உறங்குவதும் நாயகியை மனேஜர் பாலியல் கொடுமைப்படுத்துவதும் என காட்சிகள் மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளன. இத் திரைப்படத்தில் கிராமத்தில் இருந்து வரவழைக்கப்பட்டும் தொழிலாளர்கள் நாள் முழுக்க நின்றபடிNயு வேலை செய்வதால் அவர்கள் நோய் வாய்பட்டு பாதிக்கப்பட்டனர். ஆனாலும் மதிய உணவுக்காக சென்றுவிட்டு வர தாதமானால் ஒவ்வவொரு நிமிடத்திற்கும் ஒரு ரூபாய் வெட்டப்படுகிறது. நாள் முழுக்க க~;டப்பட்டவர்கள் நிம்மதியாக நித்திரை செய்யக்கூட இடமில்லாத நிலை எடுத்து காட்டப்படுகிறது. இந்த இன்னல்களின் இடையேயும் கதாநாயகன் கதாநாயகி ஆகியோருக்கு இடையில் காதலும் வளர்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் இவர்களது காதல் மாட்டிக்கொள்கிறது. அதனால் அவர்கள் மிக மோசமான நேருக்கடிகளை சந்தித்து பின்பு இருவரும் வேலையை விட்டு அனுப்பப்படுகிறார்கள். இத் தருணத்தில் கண்முன்னே தன் காதலியை துன்பப்படுத்துவதை பொறுக்காது ஆவேசப்பட்டு தாக்குவது அவனது துடிப்பை வெளிப்படுத்த நிற்கிறது. அவர்கள் புதிய வாழ்க்கையை ஆரம்பிக் ஆர்வத்துடன் செல்லும் போது எதிர்பாரத விதமாக ஏற்பட்ட விபத்தில் கால்களை இழக்கிறாள் நாயகி இக்காட்சியானது பார்ப்பவர்களை கண்ணீர் சொரிய வைக்கிறது. இதன் பின் அவர்கள் திருமணம் முடித்து அவர்கள் தமது வாழ்க்கையை மேற்கொள்வதனை காட்கின்றது. இத் திரைப்படத்தில் முதலாளித்துவத்தின் அடக்கு முறையும் வயிற்று பிழைப்புக்காக அடங்கிப்போகும் ஊழியர்களது நிலையும் அழகாக எடுத்துகாட்டப்பட்டுள்ளது.
 “கதைகளை பேசும்௪௪௪”இ “ உன் பேரை சொல்லும் போது௪௪..”இ “ அவள் அப்படி ஒன்னும் அழகில்லை” எனும் பாடல்கள் படத்தோடு இணைந்ததாக அமைந்துள்ளது. காதல் பாசம் சராசரி மனிதனின் பிரதிபலிப்பு என அனைத்தையும் ஒன்று திரட்டி அமைந்துள்ளது. ஆரம்பக் காட்சியில் இருந்து ஒருவித பதட்டத்தை ரசிகர்கள் மனதில் தேக்கி நிறுத்தி இறுதிவரை அந்தப்பதட்டத்துடனும் கவலையுடனும் நம்மை இருக்கையில் அமர வைக்கும் இப்படம் கலாபூர்வமாகவும் கருத்துரீதியாகவும் பெரும் மனப்பாதிப்பை ரசிகர்கள் மனதில் உண்டாக்கியுள்ளது.
அங்காடித் தெரு (அசலான படம்)
.
சென்னை ரங்கனாதன் தெருவில் உள்ள பிரமாண்டமான வணிக வளாகங்களில் பணிபுரியும் மக்களின் கொத்தடிமை வாழ்க்கை முறைமையை அடிப்படையாக கொண்டு இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெரும்பாலான காட்சிகள் அதே தெருவில் உள்ள கடைகளிலளேயே எடுக்கப்பட்டுள்ளன. மேலும் சில காட்சிகள் சென்னை மற்றும் தேனி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டு விரிந்து செல்கிறது.
தொழிலாளரின் துயரத்தை அழகாக எடுத்து சென்றிரூக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். கதாநாயகன் மகே~; 12ம் வகுப்பு மாணவன் அவனது தந்தை விபத்தில் இறந்து போக குடும்பம வறுமை சூழ்நிலையால் தனது மேற்படிப்பை தொடர முடியாத நிலைக்கு ஆழாகின்றான். இச் சந்தர்ப்பத்தில் பெரிய கடை ஒன்றுக்கு ஆட்கள் சேர்க்கும் செய்தி அவனது காதை வந்து அடைகிறது. இச்சந்தர்ப்பத்தை பயன் படுத்தி தன் நண்பனுடன் சென்னையில் உள்ள பெரிய கடையில் வேலைக்கு சேர்கிறான். அங்கு அனைவரும் வேலைக்கு சேர்கிறான். அங்கு அனைவரும் அடிமைகளாக நடத்தப்படுவதை பார்த்து கோபமடைகிறான் ஆனாலும் வேறு வழியின்றி அங்கேயே இயந்திரமான வாழ்க்கை வாழ்கிறான். இதற்கிடையில் நாயகியின் அறிமுகம் இத் திரைப்படத்தினை பார்ப்பவர்களை கண்ணீர் விட்டு அழ வைக்கிறது. ஊழியர்களை கெட்ட வார்த்தையால் திட்டுவது, அறைக்குள் கூட்டிச் சென்று சித்ரவதை செய்வது அத்துடன் அவர்களுக்கான உணவு வழங்கும் முறை தொழிலாளர்கள் படும் வேதனையை உணர்த்தி நிற்கிறது.

நாயகன் மகே~;ம் நாயகி அஞ்சலியும் கதாபாத்திரத்தை உள்வாங்கி அழகாக தம் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறனர் அதே போன்று நண்பனாக வரும் பாண்டி நகைச்சுவையில் சிறப்பாக செயற்பட்டுள்ளான் என்றால் மிகையாகாது. நாயகன்,நாயகி மட்டுமன்றி கதாபாத்திரம் அனைத்தும் தம் நடிப்பை மிகச்சிறப்பாகவும்,யதார்த்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதே போன்று நண்பனாக வரும் பாண்டி நகைசுவையில் கலக்கி இருக்கிறார். நாயகியின் தங்கை நாய்க் கூண்டிட்குள் படுத்து உறங்குவதும் நாயகியை மனேஜர் பாலியல் கொடுமைப்படுத்துவதும் என காட்சிகள் மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளன. இத் திரைப்படத்தில் கிராமத்தில் இருந்து வரவழைக்கப்பட்டும் தொழிலாளர்கள் நாள் முழுக்க நின்றபடிNயு வேலை செய்வதால் அவர்கள் நோய் வாய்பட்டு பாதிக்கப்பட்டனர். ஆனாலும் மதிய உணவுக்காக சென்றுவிட்டு வர தாதமானால் ஒவ்வவொரு நிமிடத்திற்கும் ஒரு ரூபாய் வெட்டப்படுகிறது. நாள் முழுக்க க~;டப்பட்டவர்கள் நிம்மதியாக நித்திரை செய்யக்கூட இடமில்லாத நிலை எடுத்து காட்டப்படுகிறது. இந்த இன்னல்களின் இடையேயும் கதாநாயகன் கதாநாயகி ஆகியோருக்கு இடையில் காதலும் வளர்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் இவர்களது காதல் மாட்டிக்கொள்கிறது. அதனால் அவர்கள் மிக மோசமான நேருக்கடிகளை சந்தித்து பின்பு இருவரும் வேலையை விட்டு அனுப்பப்படுகிறார்கள். இத் தருணத்தில் கண்முன்னே தன் காதலியை துன்பப்படுத்துவதை பொறுக்காது ஆவேசப்பட்டு தாக்குவது அவனது துடிப்பை வெளிப்படுத்த நிற்கிறது. அவர்கள் புதிய வாழ்க்கையை ஆரம்பிக் ஆர்வத்துடன் செல்லும் போது எதிர்பாரத விதமாக ஏற்பட்ட விபத்தில் கால்களை இழக்கிறாள் நாயகி இக்காட்சியானது பார்ப்பவர்களை கண்ணீர் சொரிய வைக்கிறது. இதன் பின் அவர்கள் திருமணம் முடித்து அவர்கள் தமது வாழ்க்கையை மேற்கொள்வதனை காட்கின்றது. இத் திரைப்படத்தில் முதலாளித்துவத்தின் அடக்கு முறையும் வயிற்று பிழைப்புக்காக அடங்கிப்போகும் ஊழியர்களது நிலையும் அழகாக எடுத்துகாட்டப்பட்டுள்ளது.
வாழ்க்கை என்பது எல்லோருக்கும் நேர்கதியாக அமைவதில்லை என்பதையும், அன்றாட வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டி மட்டும் மனிதர்கள் சந்திக்கும் போராட்டங்கள் ஏராளம் என்பதையும் நேரடியாக உணரும் அனுபவம் கிட்டியது. என் அனுபவத்திற்கு பிறகு இவர்கள் குறித்த என் பார்வையே மாறியது.
ஏனெனில் எனக்கு அந்த அனுபவங்களில் புரிந்தது இதெல்லாம் - ஒரு கடையில் நூறு ஊழியர்கள் இருந்தால் அனைவருக்கும் பலவகைக் காப்பீடு போன்ற குறைந்த பட்ச பாதுகாப்புகளைச் செய்ய வேண்டியது நிர்வாகத்தின் கடமை. சட்டம். ஆனால் அவை போன்ற சட்டங்கள் மிக எளிதாக வளைக்கப் படவும், மீறப் படவும் ஊழல் உதவுகிறது. தொழிலாளர் நல விதிகள், சுகாதார விதிகள், பணியாளர் விதிகள், பாதுகாப்பு விதிகள், சம்பள விதிகள், விடுப்பு விதிகள் என்று அனைத்து விதமான விதிகளும், மீறப் படுவதற்காக மட்டுமே அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு, அந்த விதிகளை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கு வருமான வாய்க்கால்களாகச் செயல்படுகின்றன. நிறுவனங்கள் கட்டாயமாகச் செய்ய வேண்டிய ஆயுள் பாதுகாப்பு, உடல்நல பாதுகாப்பு முதலியவற்றை அந்தந்த அரசு நிறுவன கண்காணிப்பாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து விடுவதன் மூலம் தவிர்த்து விடுகின்றன. சட்டம் இருந்தும் இல்லாதது போலத்தான் ஆகிறது.
 அப்படி எனக்குக் கிடைத்த நேரடி அனுபவங்களை ’அங்காடித் தெரு’ என்ற திரைப்படத்தில் மறுபடி ஒரு புனைகதையாகப் பார்த்தேன். இந்தச் சினிமா மேற்படி அவலங்களில் ஒரு பகுதியையாவது அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சென்றிருக்கிறது.

தேரிக்காட்டுக் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வரும் இளைஞனாக வரும் மகேஷும், ஏழ்மையின் காரணமாக அந்தப் பெரிய கடையில் வேலைக்குச் சேர்ந்திருக்கும் சேர்மக் கனியாக வரும் அஞ்சலியும் தேர்ச்சியுடன் இயக்குனரால் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். குறிப்பாக அந்தப் பெண்ணின் முக பாவனைகள், உடல் மொழிகளும், காட்சிக்கு ஏற்ப சட்டென்று மாறும் நடிப்பும் நல்லதொரு நடிகையை நமக்குக் காட்டுகின்றன
 “கதைகளை பேசும்௪௪௪”இ “ உன் பேரை சொல்லும் போது௪௪..”இ “ அவள் அப்படி ஒன்னும் அழகில்லை” எனும் பாடல்கள் படத்தோடு இணைந்ததாக அமைந்துள்ளது. காதல் பாசம் சராசரி மனிதனின் பிரதிபலிப்பு என அனைத்தையும் ஒன்று திரட்டி அமைந்துள்ளது. ஆரம்பக் காட்சியில் இருந்து ஒருவித பதட்டத்தை ரசிகர்கள் மனதில் தேக்கி நிறுத்தி இறுதிவரை அந்தப்பதட்டத்துடனும் கவலையுடனும் நம்மை இருக்கையில் அமர வைக்கும் இப்படம் கலாபூர்வமாகவும் கருத்துரீதியாகவும் பெரும் மனப்பாதிப்பை ரசிகர்கள் மனதில் உண்டாக்கியுள்ளது.

பார்ப்போரின் மனசாட்சியை உலுக்க எடுக்கப் பட்டுள்ள ஒரு சினிமா, ’அங்காடித் தெரு’.

Friday, April 15, 2011

ABC AFRICA

ABC AFRICA     இத் திரைப்படம் வீடீயோ டொக்கி மென்றி மூலம் எடுக்கப்பட்டுள்ளது.இந்த படம் எயி;ட்ஸ் நோயாளரை கருவாக கொண்டு எடுக்கப்பட்டு ள்ளது.2001ம்ஆண்டு இப்படம் இயக்குணர் யுடிடியள முயைசழளவயஅi யினால் எடுக்கப்பட்டது.இது 2001ஆம் ஆண்டு உயnநௌ குடைஅ குநளவiஎயட திரையிடப்பட்டது. இத்திரைப்படம் 84 நிமிடங்கள் பார்க்கக் கூடியகுறும்படமாக இருந்தது. 

ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள உகாண்டா நாட்டுக்கு சென்று, அங்கு மக்களுடன் மக்களாக இருந்து படமாக்கி உள்ளார்.அவர் குழந்தைகளுடன் இருந்து இப்படத்தினை எடுத்திருக்கிறார்.உகாண்ட நாட்டு மக்களின் வாழ்க்கை, சிறுவர்களின் கல்வி நிலைமை,அவர்களின் நடனம், பழக்க வழக்கம் என்பவற்றை தனது னுபைவையட உயஅநசய  மூலம் படமாக்கி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஏயிட்ஸ் நோய்யினால் பாதிக்கப்பட்ட மக்கள் எதிர் கொள்ளும் பிரச்சனையும் அதனை எவ்வாறு முகம் கொடுத்து எதிர் கொள்ளும் முறையினையும் அவர்களின் பராமரிப்பையும் எடுத்துக்காட்டுகிறது. ஒரு எயிட்ஸ் நோயாளி இறத்தவுடன் எவ்வாறு அடக்கம் செய்யப்படுகிறது. என்பதையும் இந்த படம் காட்டுகிறது.

இப்படத்தில் சிறுவர்கள் எவ்வாறு கல்வி கற்கின்றனர் என்றும் அவர்களை எவ்வாறு வழி நடத்தப்படுகின்றது என்றும் எடுத்துக் காட்டப்படுகிறது. இவர்கள் தங்கள் எயிட்ஸ் நோயாளர் என்று தெரிந்தும் அதற்காக கவலைப்படாது ஆடல், பாடலாக மகிழ்ச்சியாக இருப்பதை காணலாம்.
பார்ப்பவர் மனதை உருக்க வைக்கும் படமாக காணப்படுகிறது. அத்தோடு  சமூகம் எய்ட்ஸ் நோயாளர் என்றால் தள்ளி வைக்க வேண்டும் தமக்கும் நோய் வந்திடும் என்று ஆனால் இப் படத்தை பார்த்தவுடன் இவர்களுடன் சேர்ந்து பழகலாம் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
மிக எளிமையான முறையில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதனால் இப்படத்தை எடுக்கும் போது பண செலவு குறைவாக இருக்கும். சாதாரணமாக குறும் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிலாம். இவ்வாறு  நோய் பற்றி தகவல்களை வெளியிடுவதன் மூலம் நல்ல சமூகத்தை கட்டி எழுப்பலாம்.
  
Nanook of the north எனது திரைப்பார்வை……

திரைப்படமானது குறிப்பிட்ட இனத்தவரின் வாழ்க்கை முறையினை சித்தரித்து காட்டுவதாக அமைந்துள்ளது. இ

க்ளு எனப்படும் பனிக்கட்டி வீடுகளில் வாழும் எக்ஸிமோவர் இனத்து மக்களுடைய் வாழ்க்கை முறையினை சித்தரித்து காட்டுவதாக அமைந்துள்ளது.  அதாவது அவர்களினுடைய நாளாந்த வாழ்க்கை முறை உணவுப்பழக்கவழங்கள்; இவர்களினுடைய வாழ்வியல் அமைப்பு முறை என்பன இப் படத்தின் ஊடாக வெளிப்படுத்தி காட்டப்பட்டுள்ளது. இத் திரைப்படம் பேச்சு வார்த்தை எதுவும் இன்றி ஒலி, ஒளி மட்டும் வைத்து அழகாக எடுக்கப்பட்டுள்ளது. மொழிப் பிரயோகமே இங்கு காணப்பட வில்லை. இத் திரைப்படம் 1922ஆம் ஆண்டு கறுப்பு வெள்ளைப்படமாக வெளிவந்தது. 

காலநிலைக்கு ஏற்றபடி வாழ்கின்ற இம்மக்கள்; அவர்களின் உணவுத்தேவையைப்பூர்த்தி செய்ய எவ்வாறான சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கின்றது என்பது பற்றியும் தெளிவாகச் சொல்கி.; ஆதி காலத்தில் மனிதன் உணவை சமைக்காது உண்பது போலவே இவர்களும் பச்சையாக உணவை உண்கின்றார்கள். அதிலும் குறிப்பாக குடும்பத்தில் உள்ள எல்லோருமே ஒன்றாக சேர்ந்து சென்று உணவு தேடுகின்றார்கள.;.இவர்கள் வாழ்கின்ற  நிலம் ஐஸ் கட்டி. இதனால் நிலத்திற்கு கீழேயே உள்ள கடல் வாழ் உயிரினங்களை  பிடித்து பச்சையாக உண்கின்றனர்.  அத்துடன் குளிரை சமாளிக்கும் விதத்தில் ஆடைகளையும் அணிந்து தம்மை பாதுகாத்துக் கொள்கின்றனர்.

  இவர்கள் தமது குழந்தைகளை குளிரில் இருந்து பாதுகாக்க தம் உடம்போடு சேர்த்து அனைத்து வைத்திருக்ககூடியபடி  ஆடைகளை அணிந்துள்ளனர். அவர்கள் இக்லு முறையிலான வீடுகளைக் கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றனர் .அதாவது; பனிக்கட்டிகளைக்கொண்டு தம் வீடு அமைக்கின்றார்கள். தம் உதவிகளுக்காக அதாவது பிரயாணம் செய்ய நாய்களைப் பயன்படுத்துகிறார்கள். சில சமயங்களில் நாய்களுக்கிடையே சண்டைகளும்; ஏற்படுகின்றன பனிக்கட்டியால் ஓர்; கட்டிடம் அமைத்து அங்கு தங்குகின்றனர்..இந்தவகையில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உணவுத் தட்டுப்பாட்டை எதிர் கொள்ளும் ஒரு குடும்பத்தின் கதையாக  இது அமைகின்றது. ; திரைப்படத்தில் ஒளி கமரா நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. பனிக்கட்டி சூழ்ந்த இடத்தில் கமரா எடுக்கப்பட்டுள்ளன இதனால் அழகான காட்சியாக இருந்தது.

படத்தின் கதையை இசையில் மட்டும் எடுத்து காட்டியது சிறப்பாகவும் வேறு படங்களில் இருந்து வேறுபட்ட படமாக இத்திரைப்படம் அமைத்துள்ளது குறிப்பிடலாம்.
  திரைப்படத்தை பார்க்கும் போது ஆரம்பகாலத்தில் வாழ்ந்த மனிதன் இப்படியான போராட்டத்தின் மத்தியில் வாழ்ந்திருப்பார்கள்; என்ற உணர்வை ஏற்படுத்தியது.  

குழந்தைகளின் சொர்க்கம்

“வறுமையானது ஒருமனிதனை எந்தளவிற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றது" என்பதனை சிறப்பாக எடுத்தக்காட்டுகின்றது. அதிலும் சிறுவர்களை எவ்வாறு பாதிக்கின்றது என்பதை சொர்க்கத்தின் குழந்தைகள் திரைப்படம் மூலம் விளக்கப்படுகின்றது. சிறுவர்கள் தங்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற துடிக்கின்றாhகள் என்பது மையக் கதை பின்னர் அவர்களின் எதிர்பார்ப்புக்கள் இறுதியில் நிறைவேறுகிறதா என்பதே இத்திரைப்படத்தின் கதை.
கஸ்ரப்பட்டு சம்பாதித்து
குடும்பத்தைப்பார்ப்பதும் பின்பு பாடசாலைக்குச்செல்வதும் இந்த திரைப்படத்தில் எட்டுவயதான அலி,அவனது தங்கை சாரா என்னும் சிறுவர்களுக்கு பெரும் சவாலாக காணப்படுகின்றது. திரைப்படமானது சப்பாத்தினை கருப்பொருளாகக்கொண்டு  அமைந்துள்ளது.
தனது தங்கையின் பாதணியை யாரோ ஒருவரின் வண்டியில் தவறவிடுகிறான். இதனை தந்தைக்கும் தாய்க்கும் மறைத்து விடுகின்றனர்.
வறுமையி;ல் வாடும் தந்தையால் புதிய சப்பாத்தினை வாங்கிக் கொடுக்க முடியாத நிலையை உணரந்;த அலி,சாரா தங்களிடம் இருக்கும் ஒருசோடி சப்பாத்தினை மாறிமாறி அணிந்து கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகின்றது. சாரா பாடசாலை முடிவடைந்ததும் ஓடோடி வந்து அலியிடம் சப்பாத்தினை கழற்றிக்கொடுக்க அதை அணிந்தபடி அவன் பாடசாலைக்கு ஓடோடிச் செல்வான். இதனால் பலமுறை அவன் பாடசாலைக்கு நேரம் பிந்தி செல்வதும். அப்பாடசாலை அதிபரினால் தண்டிக்கப்படுவதும் உண்டு.

பாடசாலைக்குச்செல்லும் போது கடையில் பலவிதமான புதிய சப்பாத்துக்கள் இருப்பதைப்பார்த்து தனக்கும் “ஒரு சப்பாத்துகிடைக்காதா” என சாரா ஏங்குவதும்,
அதே போல் பாடசாலையில் ஒன்று கூடலுக்காக நிற்கும் போது எல்லோரும் அழகான சப்பாத்து அணிந்திருந்தார்கள். ஆனால் இவள் மட்டும் அழுக்கான அழகற்ற சப்பாத்துடன் நிற்கும் போது, ஆசிரியர் கண்காணிப்பில் ஈடுபடும் வேளை தனது புத்தகப்பையால் தன்னுடைய சப்பாத்தினை மறைத்துக் கொள்கிறாள்.
ஒரு முறை தன்னுடைய அண்ணன் அலி சப்பாத்துக்காக காத்துக் கொண்டு இருப்பான் என்பதற்க்காக பரீட்சையை விரைவாக எழுதிவிட்டு அண்ணன் அலி நிற்கும் இடம் நோக்கி வருகிறாள். வரும் வழியில் ஒரு கால் சப்பாத்து தவறி சாக்கடையினுள் விழுந்த அடித்து செல்கிறது. நீண்ட தூரம் சென்று பலத்த போராட்டத்தின் பின்னரே அதனை அவள் மீட்டு தன் அண்ணன் அலியிடம் கொண்டு சேர்க்கிறாள். அவனோ கோபத்துடன் அவளை திட்டுகின்றான் அவள் சப்பாத்தினை மீட்க கஸ்ரப்பட்டதை அறியாமல். ஆனால் அவள் பதில் ஏதும் கூறாமல் கண்ணீர் வடிக்கின்றாள். இது திரைப்படத்தை பார்த்தவர்களின் உணர்வுகளை ஈரமாக்கிறது. கடையில் அந்தச்சிறுவன் காய்கறிகளை தட்டிவிட்டான் என்று கடைக்காரன் அவனை சிறுபிள்ளைதானே என மன்னிக்காது அடிக்கத்துரத்துவதும், படத்தினை பார்ப்பவர்கள் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றது.
பாடசாலையில் நடைபெறும் அலி ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொள்கிறான். தன்னுடைய சப்பாத்து மற்றவர்களின் சப்பாத்தை விட அழுக்காகவும் பழையதாகவும் இருக்கின்றதே என்று. ஆதங்கத்தோடு ஓடுகின்றான். முதலாவதாக சென்று எல்லை கோட்டைதாண்டுகின்றான். அவ்வேளை அலி மகிழ்ச்சி அடைகின்றான்.;அங்கே உள்ள பரிசுப்பொருட்களில் ஒரு சோடி சப்பாத்தும் உள்ளது. ஆனால் இறுதியில் அவனுக்கு அது ஏமாற்றத்தை கொடுக்க கண்ணீர் சிந்தியபடி தனக்கான தங்கப்பதக்கத்தினை பெற்றுக்கொண்டான்.
நீண்ட நாள்களுக்கு பின் புதிய சப்பாத்து அணியப்போகின்றேன் என்ற மகிழ்ச்சியில் அலியின் மனநிலைடிஇருந்திருக்கிருக்கலாம். “புதிய சப்பாத்து கிடைப்பதென்பது சொர்க்கத்தை அடைந்துது போன்றதானவொன்றாக தோன்றுகிறது.” அதற்காக அலிஎடுக்கும் முயற்சிகள் அதனை வெளிப்படுத்தி உணரவைக்கிறது பாதணி இல்லாத நிலையில் அவஸ்தைப்படும் அச் சிறுவர்களுக்கு அந்த சந்தர்பத்தில் பாதணி கிடைப்பதென்பது சொர்க்கம் போன்றதாகவே காட்சியளிக்கும். அலி முதலாவதாக வந்தபடியால் தானே தனக்கும் அந்த சப்பாத்து கிடைக்காமல் போய்விட்டது.ஓட்டப்போட்டியில் மூன்றாவதாக வருவருக்கு தான் அந்த சப்பாத்து வழங்கப்பட்டது.அலிக்கு சப்பாத்து கிடைக்கவில்லை என்பது பாடத்தை பார்த்த அனைவருக்கும் தாம் எதிர்பார்த்தது நடைபெறவில்லை உணரமுடிந்தது.

;.
எனினும் பின்னர் தந்தை தான் சம்பாதித்த பணத்தைக் கொண்டு பாதணியை பெற்றுக்கொடுக்கிறார். இக் குறும்படத்தில் ஏழை பணக்காரன் என்ற சமூக ஏற்றத்தாழ்வும் ஏழைச் சிறுவர்களின் மன ஆதங்கமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. அவர்கள் ஆசையினை நிறைவேற்ற பாடுபடும் தன்மையும் வெளிக்காட்டப்படுகிறது.

பொருத்தமான இடத்தில் பிண்ணனி இசையை வழங்கி இருப்பது படத்திற்கு உயிரோட்டத்தை வழங்கியுள்ளது.  சாதரண சப்பாத்து தான் என ஆனால் சப்பாத்துக்குள் பொதிந்து கிடக்கின்ற உண்மைகளை இத்திரைப்படம் சொல்லி இருப்பது அருமையானது. இறுதியில் அந்த சப்பாத்து அண்ணன் அலி,தங்கை சரா பயன்படுத்த முடியாத அளவுக்கு கிழிந்திருப்பதை பார்த்தவர்களின் மனதில் கவலையை ஏற்படுத்தி இருப்பது உண்மை.
“சொர்க்கத்தின  குழந்தைகள் என்னும்;திரைப்படத்தினை நான் பார்க்கும் போது நான் சிறு வயதில் தவற விட்ட நினைவுகள் மறக்க முடியாமல் இருக்கின்றன. சிறு வயதில் நான் பெற்றோருக்கு சொல்லாமல் பல விடயங்கள் மறைந்தவை எல்லாம் இந்த படத்தை பார்த்தவுடன் எனது கடந்த கால நினைவுகள் மறக்க முடிய வில்லை.”

சொர்க்கத்தின்  குழந்தைகள் திரைப்படமானது 1990ம்ஆண்டு“ஆயதனை அயதனைi”எனபவரால் இயக்கப்பட்ட கனேடியஉலக திரைப்பட விழாவில் மூன்று முக்கிய விருதுகளையும் பெற்றுக்கொணடது.இத் திரைப்படம் ஈரானிய மொழித் திரைப்படமாகும்.