This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, March 16, 2011

எனக்காக வாக்கு அளியுங்கள்


திரைப்படமானது சைனீஸ் மொழியில் உருவாக்கப்பட்டு 1949ம் ஆண்டுவெளிவந்தது.இத்திரைப்படமானது பாடசாலை மாணவத் தலைவரைத் தெரிவு செய்வதை ஜனநாய
கத்துடன் சம்பந்தப்ப
டுத்தப்பட்டிருக்கிறது.

கதையின் சுருக்கம்
வகுப்பறையில் மூன்று மாணவர்களில் ஒருவரை மாணவத்த
லைவராக தெரிவு  செய்வதை இப்படத்தின் கருப்பொருளாக அமைகிறது. ஜனநாயகமுறையில் எவ்வாறு தெரிவு செய்யபடுவது போல வாக்கு அளித்து மாணவமுதல்வர் தெரிவு செய்யப்படுகிறார்.மாணவர்கள் மூவரும் மாணவத்தெரிவுக்கு முதல் ஏனைய மாணவர்களுக்கு தமது திறமைகளை பாடடு,ஆடல்,இசைக்கருவி வாசித்தல் மற்றும் தாம் மாணவமுதல்வராக தெரிவு செய்யப்பட்டால் தாம் செய்யும் கோரிக்கைகளை கூறுவதும். அவர்களில ஒருமாணவன் பரிசுப் பொருட்களை வழங்கி பிரசாரம் செய்த அந்த மாணவன் வகுப்பு மாணவத்தலைவராக தெரிவுசெய்யப்பட்டான்.இவ்வாறு ஜனநாயகத்திலும் நடைபெறுவதுண்டு தேர்தல் உறுப்பினர்கள் தேர்தல்நாளுக்கு முதல்;மக்களுக்கு உதவி செய்வது வழக்கமான ஒருவிடயம்இதேபோன்றுதான்இப்படமும் உள்ளது. இதன் மூலம் ஜனநாயகம் பல தீமைகளயும் கொண்டுள்ளது. என்பதனைக் தெளிவாக காட்டுகிறது.
மாணவர்களில் தலைவராக தெரிவு செய்யப்பட்ட மாணவன் சந்தேஷமாக இருக்க தோல்வியடைந்த மாணவர்கள் அத்தோல்வியை ஏற்கமுடியாது .வருந்துகின்றமை படத்தை பார்ப்பவர்கள் மனதை பாதிப்பதாக இருக்கும்.


இத்திரைப்படமானது மாணவர்கள் மட்டும் அல்லாது பெற்றோர்கள்,ஆசிரியர்,ஏனைய மாணவர்களை மையமாக கொண்டுள்ளது.
சிறந்த வழிகாட்டலின் மூலமே ஒருபோட்டியை எதிர்கொண்டு வெற்றி பெறமுடியும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

ஜனநாயகம் என்பது முரண்பட்டு காணப்படுகிறது.

Tuesday, March 15, 2011

பைசிக்கிள் தீஃவ்ஸ்

“வாழ்க்கை அவ்வளவு வசதியாக நமக்குப்பிடித்தமாதிரி பிடித்த இடத்திலேயே போய் நின்று கொள்வதில்லை” என்பதை இக்கதையானது உணர்த்துகிறது.பைசிபி;க்கி;ள் தீவ்ஸ் திரைப்படம் இத்தாலி மொழியில் வெளிவந்த கலை ப்படமாகும்.பிரபல கலைப்பட இயக்குனரான வித்தோரியொ டி சில்காவின் இயக்கத்தில் வெளிவந்தது. இத்திரைப்படம் 1948ம் ஆண்டு நவம்பர் மாதம் 24ம் திகதி வெளிவந்தது. இத்திரைப்படமானது தயாரிப்பாளர் கியுசெப்பெ அமெதோ,கதை லூகி பர்த்தோலினி,சிசர்சவார்த்தினிநடிப்புலம்பேர்டர்,மக்கியோராணி,என்சோஸ்டையோலா அனைவரும் இணைந்து நடித்து வெளிவந்த திரைப்படம் பைசிக்கிள் தீஃவ்ஸ் திரைப்படம். இத்திரைப்படமானது 93நிமிடங்கள் எடுக்கப்பட்டு,இத்தாலி மொழியில் வெளியிடப்பட்டது. இத்திரைப்படமே இந்தியக் கலைப்பட இயக்குனரான சத்யஜித் ராயைத் திரைப்பட இயக்குனராக மாற்றியது.
“ஒருதிருடன் உருவாகுவதற்கு என்ன காரணம் என்பதனை தெளிவாக எடுத்துக்காட்டியது. திருடனைப் பிடிதத்துக் கொடுத்தும் எந்த நடவடடிக்கையும் எடுக்காது ஒரு சமூகமே திருடனை தப்பிக்க விடுகின்றனர். ஒரு வறிய குடும்பத்தின் வறுமை நிலையினை மிகவும் தெளிவாக பார்வையாளருக்கு படம்பிடடித்து காட்டியுள்ளது.”

திரைப்படத்தின் சுருக்கக்கதை
இரண்டாம் உலக யுத்தத்தின் காலப்பகுதியில் இத்தாலி நாட்டிலில் வாழ்ந்த அந்தோனியோ வேலை செய்யும் நிறுவனத்தின் சட்டப்படி ஒரு மிதிவண்டியை வைத்திருக்க வேண்டும் என்பது மிகவும் அவசியமானதாகும். இந்த படத்தின் கதாநாயகன்  அந்தோனியோ ரிக்கி போருக்கு பிந்தைய பொருளாதார விழ்ச்சியடைந்த இத்தாலியில் வேலை இல்லா திண்டாட்டத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு மனச்சோர்வு மிக்க குடும்ப தலைவன்.  இரண்டு குழந்தைகளுடன் தன் மனைவியையும் காப்பாற்ற வேலைக்காக போராடிக் கொண்டிருந்த வேளையில் அவனுக்கு போஸ்டர் ஒட்டுகிற வேலை கிடைக்கிறது. ஆனால் அதற்கு அவனுக்கு ஒரு மிதிவண்டி தேவைப்படுகிறது. மிதிவண்டி இருக்கும்பட்சத்தில் அவனுக்கு இந்த வேலை உறுதியாக கிடைக்கும். அதனால் அந்தோனியோவின் மனைவியும் தம்மிடம் இருந்த பொருளை விற்று அவருக்கு மிதிவண்டியொன்றை வாங்கிக் கொடுத்தார். ஆனால் அந்த மிதிவண்டி சிறிது காலங்களிலேயே காணாமல் போய்விடுகிறது. வேலைக்கு சேர்ந்த அந்தோனியோ போஸ்டர் ஓட்டுவதற்காக தனது மிதிவண்டி மற்றும் ஏணி சகிதமாய் கிளம்பினான். ஓர் இடத்தில போஸ்டர் ஒட்டிக்கொண்டிருக்கும் போது அவனது மிதிவண்டியை ஒரு திருடன் திருடிக்கொண்டு போய்விடுகிறான். காவலர்களின் உதவியை அந்தோனியோ நாடுகிறான்இ ஆனால் அவர்கள் இந்த திருட்டை ஒரு பொருட்டாகவே கருதவில்லை அதனால் ரிக்கியும் அவனது நண்பர்களும் ரோம் நகர  தெருக்களில் தன் மிதிவண்டியை தேடி அலைகிறார்கள்.  பல மணி நேர தேடலுக்கு பிறகு மிதிவண்டி கிடைக்காததால் சோர்வுடன்  திரும்புகிறார்கள்.


 மறுநாள் அந்தோனியோவும் அவனது மகனும் ஒரு நண்பனின் உதவியோடு மிதிவண்டி மற்றும் அதன் உதிரி பாகங்கள் விற்கும் இடத்திற்கு சென்று தொலைந்த மிதிவண்டியைத் தேடுகிறார்கள். பயன் எதுவும் இல்லைஇ அந்தோனியோவின் மனைவி அவனை ஒரு குறி சொல்பவரிடம் அழைத்து சென்று அவனிடம் இருந்த கடைசி பணத்தையும் செலவழிக்கிறான்இ குறி கேட்டு திரும்பி வரும்போது மிதிவண்டி திருடியவனை அந்தோனியோ பார்க்க நேரிடுகிறதுஇ அவனை துரத்தி ஓடுகிறான். நீண்ட தூரம் துரத்தி திருடனை அவனது இல்லத்துக்கு அருகில் பிடிக்கிறான்.ஆனால் சூழ்நிலையை பார்க்கும் போது அவனது மிதிவண்டியை திருடன் விற்றுருப்பான் போலிருந்தது. இந்நிலையில் காவல்அதிகாரி துணை கொண்டு திருடனின் வீட்டில் விசாரணை நடத்துகிறார்கள். ஆனால் அங்கு மிதிவண்டியோ அதன் பாகங்களோ எதுவும் இல்லாததால் வெறும் கையேடு திரும்புகிறார்கள்.. மிகவும் மனஸ்தாபத்துடன் வேலையையும் விட்டு அவர் தனது மகனுடன் மிதிவண்டியினை தேடி அலைகின்றன. இவ்வாறு பல இடங்களில் தேடி தனது மிதிவண்டியினை திருடிய திருடனை கண்டு பிடிக்கிறான் கண்டு பிடித்தும் அத்திருடனை யாரும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கவில்லை இதனால் மனமுடைந்த அந்தோனியோ ஒரு மிதிவண்டியினை திருட நினைத்து திருடுகிறான் .
அதனை மிதிவண்டிக்குச் சொந்தக்காரன் பார்த்துவிட்டான.; உடனே அவன் திருடன் திருடன் எனக்கூச்சலிட்டு அந்தோனியோ வைப்பிடித்து மிதிவண்டியை பறித்துவிட்டு எல்லோருமாக சேர்ந்து அடித்து கலைக்கிறார்கள். அப்படியே மிதிவண்டியும் இன்றி வேலையுமின்றி தனது மகனுடன் செல்கிறார்.

Monday, March 14, 2011

ஐக்கிய நாடுகள் சபை

உலகநாடுகள் அனைத்தினதும் பொது அமைப்பாக அதாவது நாடுகளுக்கிடையேயான கூட்டுறவை வளர்க்கவும் உலக மக்களின்  முன்னேற்றத்திற்காகவும் நல்வாழ்விற்காகவும் என எற்படுத்தப்பட்ட அமைப்பே இதுவாகும். இரண்டாம் உலகப்போர் நடைபெற்ற சமயம் உலகப்போர் ஒன்று மீள ஆரம்பிக்கப்படாமல்  இருப்பதற்காகவும் இரண்டாம் உலகப்போரின் எதிரொலியாகவுமே தோற்றம் பெற்றது.
    1945-06-25ல் அமெரிக்காவின் சன்பிரான்சிஸ்கோ நகரில் 50 நாடுகள் பங்டீகற்புடன் ஐக்கிய நாடுகள் சாசனம் எற்றுக்கொள்ளப்பட்டது. இச்சாசனம் 111விதிகளைக்கொண்டது. 1945-10-24ல் நியூயோக்கில் ஐக்கிய நாடுகள் சபை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் கொடியானது வெளிர் நில நிறப்பிண்ணனியில் வெண்மை நிறத்தில் ஐ.நா.சபையின் சின்னமான ஒலிவ் இலைகளுடன் கூடிய உலகப்படத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
    ஐக்கிய நாடுகள் சபையின் 6 பிரதான அமைப்புக்கள் காணப்படுகின்றது.
1.   பொதுச்சபை
2.   பாதுகாப்புச்சபை
3.   பொருளாதாரச் சபை
4.   சர்வதேச நீதிமன்றம்
5.   செயலாளர் நாயகத்தின் பணிமனை
6.   தர்மகர்த்தா சபை
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் ஐக்கய அமெரிக்கா சீனா பிரான்ஸ் பிரித்தானியா ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகளுமே நிரந்தர அங்கத்துவ நாடுகளாக உள்ளன. இந்த நாடுகளுக்குப் பாதுகாப்புச்சபையில் எடுக்கப்படும் தீர்மானம் தொடர்பில் ஐந்து நிரந்தர உறுப்பினர்களில் யாரெனும் ஒருவர் ஒத்துக்கொள்ளாமல் மறுத்து வாக்களித்தார் வீட்டோ (ஏநவழ) அதிகாரம் என்பர்.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகங்கள்
1946 – 1953 பிரைவீனா (நோர்வே)
1953 – 1961 பேக்வோமா விரீகி (சுவீடன்)
1961 – 1971 யூதானீட் (பர்மா)
1972 – 1981 இர்ட்வய் குஹிம் (ஆஸ்திரியா)
1980 – 1991 Nவியர் பெரஸ் டி கொயீலர் ( பெரு)
1992 – 1997 பூட்ரோஸ் காரி (எகிப்து)
1997 – 2002 கொபி அனான் (கானா)
2002 – 2006 கொபி அனான் (கானா)
2007       பான்கீமூன் (தென் கெரியா)
ஐக்கிய நாடுகள் சபையில் செயலாளர் நாயகத்தின் பதவிக்காலம் 5 வருடங்கள் ஆகும்.
ஐக்கிய நாடுகள் சபை 1975ல் பொன்வி மாவைப் கொண்டாடியது. ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை உறுப்புரிமை பெற்ற ஆண்டு 1955 – 12 -14 ஐ.நா.ச கொடியில் காணப்படும் ஒலிவ் இலைகள் சமாதானத்தை குறிக்கும் ஐக்கிய நாடுகள் சபையில் பயன்படுத்தப்படும் மொழிகள் ஆங்கிலம் பிரெஞ் சீனம் அராபிக் ரஷ்யன் ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட நாடு தைவான்
ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பினரல்லாத ஐரோப்பிய நாடு வாடிகன்

ஐக்கிய நாடுகள் சபையின் துணை நிறுவனங்கள்
ஐக்கிய நாடுகள் கல்வி விஞ்ஞான பண்பாட்டு நிறுவனம் (ருNநுளுஊழு)
ஐக்கிய நாடுகள் குழந்தைகள் நிதியம் (ருNஐஊநுகு)
உலக வங்கி அல்லது அபிவிருத்திக்கும் புணரமைப்பிற்குமான சர்வதேச வங்கி (ஐடீசுனு)
சர்வதேச நாணய நிதியம் (ஐஆகு)
உலக சுகாதார நிறுவனம் (றுர்ஐ)
உணவு விவசாய நிறுவனம் (குயுழு)
உலக வானிலை அமைப்பு (றுஆழு)
அகதிகள் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்கராயம் (ருNஊர்நுசு)
சர்வதேச தொழிலாளர் நிறுவனம் (ஐஊழு)
சர்வதேச அணுச்சக்தி முகவரகம (ஐயுகுயு)
ஐ.நா. வளர்ச்சித்திட்டம் (ருNயுP)
ஐ.நா.மக்கள் தொகை செயற்பாட்டு நிறுவனம் (ருNகுPயு)
ஐக்கிய நாடுகள் சுற்றுப்புறம் செயல் முனைத்திட்டம் (ருNநுP)
கடல்சார் செயற்பாடுகளுக்கான பண்பாட்டு அமைப்பு (ஐஆழு)
பண்ணாட்டு தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் அமைப்பு (ஐNவுநுடுளுயுவு)
மனிதக் குடியிருப்புக்கான ஐக்கிய நாடுகள் நிலையம்


ஐக்கிய நாடுகள் பொதுச் சபை
ஐக்கிய நாடுகள் பெதுச்சபையானது. ஐக்கிய நாடுகளின் ஐந்து முக்கிய அங்கங்களுள் ஒன்றாகும். இதில் எல்லாநாடுகளிற்குமே சம உரிமையளிக்கப்படும். இதில் ஐக்கிய நாடுகளின் வரவு செலவுகளைக் கண்காணிப்பதற்கும்இ நிதந்தரம் அல்லாத உறுப்பினர்களை பாதுகாப்புச் சபைக்குத் தேர்ந்தெடுப்பதற்கும் பொதுச்சபையின் தீர்மானங்களைப் பரிந்துரைப்பதும் இச்சபையின் கடமையாகும்.இதன் முதலாவது கூட்டமானது 10 ஜனவரி 1946 இல் வெஸ்மினிஸ்டர் மத்திய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.அனைத்துலக நீதிமன்றம்
அனைத்துலகநீதிமன்றம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் நீதித்துறை சார்ந்த முதன்மை அமைப்பு ஆகும். இது நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஹேக்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பட்டயத்தின்படி 1945 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந் நீதிமன்றம் 1946 ஆம் ஆண்டில் இயங்கத் தொடங்கியது.இதன் உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்படும் சட்டத் தகராறுகளைத் தீர்த்து வைப்பதும்இ முறையான அதிகாரம் பெற்ற அனைத்துலக அமைப்புக்கள்  ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆகியவை முன்வைக்கும் சட்டம் தொடர்பான கேள்விகள் குறித்து ஆலோசனை வழங்குவதும் இந்த நீதிமன்றத்தின் முக்கிய பணிகளாகும். இதன் வரலாற்றில் மிகக் குறைந்த வழக்குகளையே இது கையாண்டுள்ளது எனினும்  1980 களுக்குப் பின்னர் இந் நீதிமன்றத்தைப் பயன்படுத்திக் கொள்வதில்  சிறப்பாக வளர்ந்துவரும் நாடுகள் மத்தியில்  ஆர்வம் காணப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபைப் பட்டயத்தின் 14 ஆம் பிரிவு  உலக நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை நிறைவேற்றுவதற்குப் பொதுச்சபைக்கு அதிகாரம் அளித்துள்ளது. எனினும் இது சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் தடுப்பு வாக்குரிமைக்கு உட்பட்டது ஆகும்.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்

அகதிகளுக்கான ஜக்கிய நாடுகளின் ஆணயம் அல்லது ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானியம் என்னும் ஐக்கிய நாடுகள் அமைப்பானது அகதிகளைப் பாதுகாப்பதற்கும்இ ஆதரவளிப்பதற்கும்இ அரசின் அழைப்பினாலோ அல்லது ஐக்கிய நாடுகளின் அழைப்பினால் அகதிகளை மீளத் திரும்புவதற்கோ அல்லது மீள் குடியமர்விற்கோ உதவுவதைக் கருப்பொருளாகக் கொண்டதாகும். இவ்வமைப்பானது உலகளாவிய அகதிகள் பிரச்சினையை முன்னின்று கவனிப்பதுடன் சர்வதேச அமைப்புக்களுடனும் சேர்ந்து செயற்பட்டு அகதிகளைப் பாதுகாத்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வருகின்றது.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை
ஐக்கிய நாடுகள் பெதுச்சபையானது. ஐக்கிய நாடுகளின் ஐந்து முக்கிய அங்கங்களுள் ஒன்றாகும். இதில் எல்லாநாடுகளிற்குமே சம உரிமையளிக்கப்படும். இதில் ஐக்கிய நாடுகளின் வரவு செலவுகளைக் கண்காணிப்பதற்கும்இ நிதந்தரம் அல்லாத உறுப்பினர்களை பாதுகாப்புச் சபைக்குத் தேர்ந்தெடுப்பதற்கும் பொதுச்சபையின் தீர்மானங்களைப் பரிந்துரைப்பதும் இச்சபையின் கடமையாகும்.இதன் முதலாவது கூட்டமானது 10 ஜனவரி 1946 இல் வெஸ்மினிஸ்டர் மத்திய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.அனைத்துலக நீதிமன்றம்
அனைத்துலகநீதிமன்றம் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் நீதித்துறை சார்ந்த முதன்மை அமைப்பு ஆகும். இது நெதர்லாந்து நாட்டின் தலைநகரான ஹேக்கில் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பட்டயத்தின்படி 1945 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந் நீதிமன்றம் 1946 ஆம் ஆண்டில் இயங்கத் தொடங்கியது.இதன் உறுப்பு நாடுகளால் முன்வைக்கப்படும் சட்டத் தகராறுகளைத் தீர்த்து வைப்பதும்இ முறையான அதிகாரம் பெற்ற அனைத்துலக அமைப்புக்கள்  ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஆகியவை முன்வைக்கும் சட்டம் தொடர்பான கேள்விகள் குறித்து ஆலோசனை வழங்குவதும் இந்த நீதிமன்றத்தின் முக்கிய பணிகளாகும். இதன் வரலாற்றில் மிகக் குறைந்த வழக்குகளையே இது கையாண்டுள்ளது எனினும்  1980 களுக்குப் பின்னர் இந் நீதிமன்றத்தைப் பயன்படுத்திக் கொள்வதில்  சிறப்பாக வளர்ந்துவரும் நாடுகள் மத்தியில்  ஆர்வம் காணப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபைப் பட்டயத்தின் 14 ஆம் பிரிவு  உலக நீதிமன்றத்தின் தீர்ப்புக்களை நிறைவேற்றுவதற்குப் பொதுச்சபைக்கு அதிகாரம் அளித்துள்ளது. எனினும் இது சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளின் தடுப்பு வாக்குரிமைக்கு உட்பட்டது ஆகும்.
உலக உணவுத் திட்டம்

               
1962 இல் ஈரான் நாட்டில் ஏற்பட்ட பூமிஅதிர்ச்சிஇ அதைத் தொடர்ந்து அக்டோபரில் தாய்லாந்து நாட்டில் ஏற்பட்ட புயல்இ புதிய சுதந்திரம் பெற்ற அல்ஜீரியாவில் ஏற்ற 5 மில்லியனிற்கும் மேற்பட்ட அகதிகள் போன்ற பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு 1963 ஆம் ஆண்டு பரீட்சாத்தகரமாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத்திட்டமானது 3 ஆண்டுகளிற்கு ஆரம்பிக்கப் பட்டது. இதன் வெற்றிகரமான திட்டங்களைத் தொடர்ந்து சுனாமி பேரழிவு வரை அதன் பணிகள் தொடர்கின்றன. ஒவ்வொரு வருடமும் 90 மில்லியன் வறுமைக்கோட்டில் கீழ் இருக்கும் 56 மில்லியன் பட்டினியில் வாடிவதங்கும் சிறுவர்கள் இருக்கும் 80 இற்கும் மேற்பட்ட உலகின் வறிய நாடுகளில் இவ்வமைப்பானது உதவி வழங்கிவருகின்றது. இவ்வமைப்பானது உணவானது ஓர் மனிதனின் அடிப்படை என்கின்ற தத்துவத்தில் இயங்கிவருகின்றது.

இலங்கையில் அதன் பணி
இலங்கையில் உள்ள உலக உணவுத்திட்ட அலுவலகங்கள் ஆரம்பத்தில் கொழும்பில் 1968 இல் அலுவலகம் ஒன்றை அமைத்தனர் அதைத் தொடர்ந்து வவுனியாவிலும் அதன் பின்னர் கிளிநொச்சியிலும் அலுவலங்கள் அமைக்கப் பட்டன. சுனாமி பேரளிவைத் தொடர்ந்துஇ யாழ்ப்பாணம்இ முல்லைத்தீவுஇ திருகோணமலைஇ மட்டக்களப்புஇ அம்பாறைஇ காலி ஆகியமாவட்டங்களில் தனது பணியை 2005 ஆம் ஆண்டில் ஆரம்பித்து. 2006 ஆம் ஆண்டில் பொலநறுவையிலும் அனுராதபுரத்திலும் அலுவலகங்கள் திறக்கப் பட்டுள்ளது. 2008 ஆம் ஆண்டில் யுத்தக் காரணங்களுக்காக முல்லைத்தீவு அலுவலகம் மூடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பு
ஐக்கிய நாடுகளின் குடிசார் அமைப்பானது ஐக்கிய நாடுகளின் குடியமர்விற்கான அமைப்பாகும். இது 1978 இல் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது. தலைமை அலுவலகம் நைரோபி கென்யாவில் உள்ளது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் சமூக ரீதியாகவும் சூழல் ரீதியாகவும் உலகில் அனைவருகும் போதுமான புகலிடத்தை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும்.சுனாமியை அடுத்து சமூகத்தை மீள்கட்டியெழுப்புவதில் ஐக்கிய நாடுகள் குடிசார் அமைப்பு பங்காற்றியது.  

   ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம்


ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் 11 டிசம்பர் 1946 இல் ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையினால் இரண்டால் உலகயுத்ததில் அழிவுற்ற நாடுகளில் உள்ள சிறார்களிற்கு உணவு மற்றும் சுகாதார வசதிகளை வழங்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது.. இதன் தலைமை அலுவலகமானது அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் அமைந்துள்ளது. ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியமானது வளர்ந்து வரும் நாடுகளின் தாய் சேய் தொடர்பான வசதிவாய்ப்புக்களை பெருக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
முக்கிய இலக்குக்கள்
யுனிசெவ் அமைப்பானது 155 நாடுகளில் பணியாற்றி வருகின்றது. கீழ் வரும் ஐந்து முக்கிய இலக்குகளில் ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் ஈடுபட்டு வருகின்றது.
•             பெண் பிள்ளைகளின் கல்வி
•             ஏற்பூசி ஏற்றல் எச்.ஐ.வி
•             சிறுவரின் பாதுகாப்பு
•             சிறார் பருவம்

ஐக்கிய நாடுகள் கல்விஇ அறிவியல்இ பண்பாட்டு நிறுவனம்
                                ஐக்கிய நாடுகளின் கல்விஇ அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பு
                               
ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் மற்றும் பண்பாட்டு அமைப்பானது ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய துணை நிறுவனங்களில் ஒன்று. 1945 ஆம் ஆண்டு நவம்பர் 16 ஆம் தேதி உருவான இந் நிறுவனம்  இதன் உறுப்பு நாடுகளிடையே  கல்விஇ அறிவியல்இ பண்பாடு மற்றும் தொடர்புத் துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது. மேற்படி துறைகள் மனித மனங்களில் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதான நோக்கத்தை அடைவதற்கான வழியாக இருக்கின்றன என்ற அடிப்படையைக் கொண்டே இந் நிறுவனம் இயங்கி வருகின்றது.
இவ்வகையான ஒத்துழைப்பினால் உலகில் அமைதியையும்இ பாதுகாப்பையும் ஏற்படுத்தி  அதன் மூலம் இனஇ மொழிஇ மதஇ பால் வேறுபாடின்றி  உலக மக்கள் அனைவருக்குமான நீதிஇ சட்ட விதிமுறைகள்இ மனித உரிமைகள்  மற்றும் ஐக்கிய நாடுகள் உரிமை ஆவணத்தில் அறிவிக்கப்பட்டிருக்கும் அடிப்படைச்சுதந்திரம் ஆகியவற்றிற்கு உலகளாவிய ரீதியில் கிடைக்கும் மதிப்பை உறுதி செய்வதே இவ்வமைப்பின் நோக்கமாகும்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணயம் என்பது பன்னாட்டுச் சட்டங்களுக்கு அமையஇ 1948 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைய மனித உரிமைகளைப் பேணவும் அதன் மேன்மைக்காக உழைக்கவும் ஏற்படுத்தப்பட்ட ஓர் ஐக்கிய நாடுகள் நிறுவனமாகும்.

ஜூன் 25இ 1993 ஆம் ஆண்டில் ஆஸ்திரியாவின் வியென்னா  நகரில் இடம்பெற்ற ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் இவ்வாணையம் அமைக்கப்பட்டதுஇவ்வாணையத்தின் நடப்புத் தலைவராக தென்னாபிரிக்காவைச் சேர்ந்த நவநீதம் பிள்ளை ஜூலை 28இ 2008ம் ஆண்டில் இடம்பெற்ற ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார

ஐரோப்பிய ஒன்றியம்


ஐரோப்பிய ஒன்றியம்என்பது தற்பொழுது 27உறுப்பு நாடுகளைக்கொண்டநாடு தாண்டிய அரசிடை அமைப்பாகும்.                 1992ல் நிறுவப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய உடன்பாட்டை மாசுடிரிச் ஒப்பந்தம் என்றும் பரவலாக அறியப்படுகிறது. எனினும் 1950கள் முதற்கொண்டே இயங்கி வந்த பல்வேறு முன்னோடி அமைப்புகளின் செயற்பாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தை ஒத்து இருந்தன. ஏறத்தாழ 500 மில்லியன் குடிமக்களைக் கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உலகத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% உருவாக்குகின்றன.
ஐரோப்பிய ஒன்றியம் தனது உறுப்பு நாடுகளிடையே மக்கள், பொருட்கள், சேவைகள், முதலீடு ஆகியவற்றின் கட்டற்ற நகர்வுகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் பொதுவான சட்டங்களைக் கொண்ட ஒற்றைச் சந்தையை உருவாக்கியுள்ளது. இது பொதுவான வணிகக் கொள்கை, வேளாண்மை,மீன்பிடிக் கொள்கைகள் என்பவற்றுடன் பிரதேச வளர்ச்சிக் கொள்கையையும்  பேணி வருகின்றது. பதினைந்து உறுப்பு நாடுகள் யூரோ எனப்படும் பொதுவான நாணய முறையையும் ஏற்றுக்கொண்டுள்ளன. 


இது ஒரு வெளிநாட்டலுவல்கள் கொள்கையொன்றையும் உருவாக்கியுள்ளதுடன் உலக வணிக அமைப்பு, ஜி8 உச்சி மாநாடு,ஐக்கியநாடுகள் சபை என்பவற்றிலும் சார்பாண்மை கொண்டுள்ளது. 21 ஐரோப்பிய ஒன்றிய நாட்டுகள் "நாட்டோ" அமைப்பிலும் உறுப்பு நாடுகளாக உள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உறுப்பு நாடுகளின் நீதியமைப்பு, உள்நாட்டு அலுவல்கள் ஆகியவற்றிலும் பங்களிப்புகள் உண்டு. ஐரோப்பிய ஒன்றியம், முடிவுகளை எடுப்பதில் அரசுகளிடையான இணக்கப்பாடு, அரசுகளுக்கு அப்பாற்பட்டு இயங்கும் அமைப்புக்கள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கலப்பு முறையைக் கைக்கொள்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பிய ஆணையம், ஐரோப்பிய நாடாளுமன்றம், ஐரோப்பிய ஒன்றிய அவை, ஐரோப்பிய அவை, ஐரோப்பிய நீதிமன்றம், ஐரோப்பிய மத்திய வங்கி ஆகிய அமைப்புக்களை உள்ளடக்கியுள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் குடிமக்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஐரோப்பிய நாடாளுமன்றத்தைத் தெரிவு செய்கின்றனர்.
1951 ஆம் ஆண்டில் ஆறு நாடுகள் சேர்ந்து உருவாக்கிய ஐரோப்பிய நிலக்கரி மற்றும் உருக்கு சமூகம், 1957 ஆம் ஆண்டின் ரோம் ஒப்பந்தம் ஆகியவையே ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றத்தின் மூலமாகக் கருதப்படுகிறது. அக்காலத்தில் இருந்து ஒன்றியம் புதிய                                    உறுப்பு நாடுகளை உள்ளடக்கி விரிவடைந்தது. பெல்ஜியம்,பிரான்ஸ்,இத்தாலி,லக்சம்பர்க்,நெதர்லாந்து,மேற்குஜேர்மனி நாடுகள் இதன் தொடக்க உறுப்பினர்களாக இருந்தன.
1957 ஆம் ஆண்டில் இரண்டு புதிய அமைப்புக்கள் உருவாகின. ஒன்று ஜரோப்பியப் பெருளியல் சமூகம், மற்றது அணுவாற்றல் வளர்ச்சியில் கூட்டு முயற்சிகளை மேற்கொள்வதற்கான ஜரோப்பிய அணுவாற்றல் சமூகம்.1986ல் ஐரோப்பியக் கொடி பயன்படத் தொடங்கியதுடன் தலைவர்கள்ஒற்றை ஜரோப்பிய சட்டமூலம் ஒன்றிலும் கையெழுத்திட்டனர்.

1993 நவம்பர் 1 ஆம் தேதி மாசுடிரிச் ஒப்பந்தம் செயல்படத் தொடங்கியபோது ஐரோப்பிய ஒன்றியம் முறைப்படி நிறுவப்பட்டது. 1995ல்ஆஸ்திரியா,சுவிடன்,பின்லாந்து ஆகிய நாடுகள் புதிய ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்ந்துகொண்டன. 2002 ஆம் ஆண்டில் 12 உறுப்பு நாடுகளில் அவற்றின் நாணயங்களுக்குப் பதிலாகப் புதிதாக உருவாக்கப்பட்ட யூரோநாணயம்  புழக்கத்துக்கு வந்தது. பின்னர்யூரோவலயம்15 நாடுகளை உள்ளடக்கியதாக விரிவடைந்தது.                                                                                       2004 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றியத்தின் மிகப் பெரிய விரிவாக்கம் இடம்பெற்றது.அப்போதுமால்டா,சைபிரஸ்,சிலொவேனியா,எஸ்தோனிய,லத்சியா,லித்துவேனியா,போலாந்து,செக்குடியரசு,சிலோவாக்கியா, ஹங்கேரி ஆகிய 11 நாடுகள் இவ்வொன்றியத்தில் இணைந்தன.

ஐரோப்பிய ஒன்றியம் தற்போது 27 சுதந்திரமான, இறைமையுள்ள நாடுகளை உறுப்புநாடுகளாகக் கொண்டுள்ளது. இவை, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, சைப்பிரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, கிரேக்கம், ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, லத்வியா, லித்துவேனியா, லக்சம்பர்க், மால்ட்டா, நெதர்லாந்து, போலந்து, போர்த்துக்கல், ருமேனியா, சிலோவாக்கியா, சிலோவேனியா, எசுப்பானியா, சுவீடன், ஐக்கிய இராச்சியம் என்பவை. குரோசியா,மசிடோனியக்குடியரசு,துருக்கி, ஆகிய மூன்று நாடுகளும் உறுப்பினர்களாகச் சேர்வதற்கான நியமனம் பெற்றுள்ளன. மேற்கு பால்க்கன் பகுதி நாடுகளானஅல்பேனியா,பொஸ்னியா,ஹெர்சகொவினா,மன்டனீக்ரோ, செர்பியா ஆகிய நாடுகளும் இவ்வமைப்பில் சேரும் தகுதியுள்ளவையாக ஏற்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஆணையம் கொசோவோவையும் தகுதியுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தும், ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள் அனைத்தும் இதனை ஒரு தனி நாடாக ஏற்றுக்கொள்ளாமையால் அதனைத் தகுதியுள்ள நாடுகள் பட்டியலில் சேர்க்கவில்லை. 

  

Sunday, March 13, 2011

டோக்கியோ : இந்த நூற்றாண்டில் முதன் முறையாக வரலாறு காணாத அதிபயங்கர பூகம்பமும், சுனாமியும் அடுத்தடுத்து படையெடுத்து ஜப்பானை புரட்டி போட்டுவிட்டன; வட கடலோர பகுதிகளை 33 அடி உயர சுனாமி பேரலைகள் சுருட்டிக் கொண்டு போய் விட்டன. கார் முதல் கப்பல்கள் வரை கடல் விழுங்கிவிட்டது. இந்த கோர தாண்டவத்தால், 40 லட்சம் பேர் வீடுகள் இழந்து தவிக்கின்றனர். எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிகின்றன.

பூகம்பத்தில் டோக்கியோ உட்பட சில நகரங்கள் அரண்டு போயின. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதம் பெரிய அளவில் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. சுனாமி தாக்கியதில் 60 பேர் பலியாகினர். இந்த பேரழிவில் 1000க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. ரஷ்யா, ஹவாய், பிலிப்பைன்ஸ், தென் அமெரிக்க நாடுகளுக்கும் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

எப்போது, எங்கு?: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இருந்து 300 கி.மீ. தொலைவில் பசிபிக் கடலில் நேற்று காலை இந்திய நேரப்படி 11.16 மணிக்கு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அதை ரிக்டர் அளவு கோலில் 8.9 புள்ளிகளாக பதிவு செய்தது. இந்த நூற்றாண்டில் இதுவரை ஏற்பட்டிராத ‘மெகா’ பூகம்பம் என்று தெரிவித்தது.

ஜப்பானின் மக்கள் நெரிசல் மிக்க தீவான ஹான்ஷூ அருகே கடலின் 22 கி.மீ. ஆழத்தில் பூகம்பத்தின் மையம் இருந்தது. இதனால், டோக்கியோ நகரம் குலுங்கியது.
பூகம்ப நாடான ஜப்பானில் அதை எதிர்பார்த்து சேதம் ஏற்படாத அளவில் கட்டிடங்கள் அமைந் திருந்தாலும் நேற்றைய பூகம்பத்துக்கு அவற்றில் பல இடிந்து விழுந்தன. பெரிய கட்டிடங்களில் மின் கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. எண்ணெய் கிடங்குகள் தீப்பற்றி எரிந்தன.

தொடர் அதிர்வுகள்: பூகம்பம் நடந்த அரை மணி நேரத்தில் அந்நாட்டின் அவசர அமைச்சரவைக் கூட்டம் நடந்தது. அப்போது பூகம்பத்தை தொடரும் அதிர்வுகள் ஏற்பட்டன. அதனால், அமைச்சரவை கூடிய அரங்கத்தில் அலங்கார விளக்குகள், மேஜைகள் குலுங்கின. பீதியுடனே முடிந்த கூட்டத்தில், போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை நடத்த பிரதமர் நவ்டோ கான் தலைமையிலான அமைச்சரவை முடிவு செய்தது.

அணு உலைகள் பாதிப்பா? பயங்கர பூகம்பத்தால் ஜப்பானின் அணு
உலைகள் கசிவதாகவும், பெரும் தீ விபத்து ஏற்படக்கூடும் என்று சில மீடியாக்களில் தகவல் வெளியானது. எனினும், அதை பிரதமர் நவ்டோ மறுத்தார். அணு உலைகள் பாதுகாப்பாக இருக்கின்றன, அவற்றில் கசிவு இல்லை என்றார் அவர். சுனாமி தாக்குதல்: டோக்கியோ உட்பட வட ஜப்பானின் பல நகரங்களை அடுத்த ஒரு மணி நேரத்தில் பயங்கர வேகத்தில் சுனாமி தாக்கியது. டோக்கியோ,

ஒசாகா நகரங்களுக்குள் 33 அடி உயரம் எழுந்த பேரலைகள் பல கி.மீ. தூரத்துக்கு உள்ளே பாய்ந்தன. இந்த பேரலைகள், வீடுகள், கார்களை கடலுக்குள் இழுத்துச் சென்றன. சில பகுதிகளில் 10 மீட்டர் உயர அலைகள் கரை தாண்டி வந்தன. பயங்கர பூகம்பத்தால் முக்கிய பகுதிகளில் மின்சாரம், தொலைத் தொடர்பு துண்டிக்கப்பட்டதால், சுனாமியின் தீவிரத்தை பதிவு செய்யும் வீடியோக்கள் உடனடியாக வெளிவரவில்லை.

ஹான்ஷூ தீவில் 12 அடி உயரத்துக்கு ராட்சத அலைகள் நகருக்குள் நுழைந்து கார்கள், வீடுகள், படகுகளை புரட்டிப் போட்ட வீடியோ வெளியானது. கடலோர நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது கடல் நீர் சூழ்ந்ததால், போக்குவரத்து ஸ்தம்பித்தது. அச்சத்தில் வாகனங்களை நிறுத்தி விட்டு அனைவரும் தப்பி ஓடினர்.
பூகம்பம் ஏற்பட்டபோது, அலுவலகங்கள், வீடுகளில் பொருட்கள் உருண்டு விழுந்தன. கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. மக்கள் பீதியில் கட்டிடங்கள், வீடுகளைவிட்டு சாலைக்கு ஓடி வந்தனர். சாலைகளில் விரிசல் ஏற்பட்டதால் அச்சத்தில் அப்படியே உறைந்தனர்.

கடல் நீரில் தத்தளித்த நகரம்: பல மீட்டர் உயரத்துக்கு ஊருக்குள் புகுந்த கடல் நீரில் கார்கள், லாரிகள், வீடுகள், வீட்டு சாதனங்கள், இடிபாடுகள் அனைத்தும் பொம்மைகள் போல மிதந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஜப்பானில் பூகம்பமும், சுனாமியும் பழகிப் போன விஷயம் என்ற போதிலும் நேற்றைய பூகம்பம் மற்றும் சுனாமிக்கு 60 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவித்தன. மேலும் 1000த்திற்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடக்கிறது.

விமான நிலையம் மூடல்: டோக்கியோ அருகே செண்டாய் நகர விமான நிலையத்தை கடல் நீர் சூழ்ந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. உயிர் தப்ப பயணிகள் அனைவரும் விமான நிலைய கூரை மீது தஞ்சம் அடைந்தனர். பூகம்பத்தால் உயர்மட்ட பாலங்கள் சேதம் அடைந்திருப்பதால், டோக்கியோ, ஒசாகா நகரங்களில் மெட்ரோ ரயில் போக்குவரத்து உடனடியாக நிறுத்தப்பட்டது. சாலைகளில் விரிசல், சுனாமியால் அடித்து வரப்பட்ட இடிபாடுகள் காரணமாக வாகனப் போக்குவரத்தும் முடங்கியுள்ளது.

பூகம்பம், சுனாமியால் பாதித்த 11,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர். டோக்கியோவை சுற்றி மியாகி, ஒடாய்பா, செண்டாய் உட்பட நான்கு மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்தது. கடந்த ஒரு வாரத்தில் இதே பகுதியில் பலமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. நேற்றைய பூகம்பத்துக்கு பிறகு ஏற்பட்ட அதிர்வுகளில் 7.1 புள்ளி அதிகபட்சமாக இருந்தது. இது நியூசிலாந்தில் சமீபத்தில் நூற்றுக்கணக்கானோரை பலி கொண்ட 6.3 புள்ளி நிலநடுக்கத்தைவிட அதிகம்

Wednesday, March 9, 2011

ஆறாவது விரல் ஆக்கினை தருமா?

-சுகந்தி-
தொலைபேசி என்றாலே புதினமாகப் பார்த்த காலம் போய், இன்று ஆளுக்கு ஒன்று என்று ஒவ்வொரு வீட்டிலும் எல்லோருடைய கைகளிலும் கையடக்கத் தொலைபேசிகள் இருக்கின்றன. ஒருவருக்கு ஒரு கைபேசி போதாதென்று, ஒன்றுக்கு மேற்பட்ட சேவை வழங்குநர்களின் இலக்கங்களைப் பயன்படுத்தக்கூடிய Dual Sim வசதியுடைய கைபேசிகளும் பாவனைக்கு வந்துவிட்டன.
இந்த வளர்ச்சிப் போக்கின் புதிய பாய்ச்சலாக, இன்டெக்ஸ் நிறுவனம் அண்மையில் மூன்று சிம்களுடன் இயங்கும் நவீன கைபேசிகளை சந்தைக்கு விட்டுள்ளது. இரண்டு ஜி.எஸ்.எம். மற்றும் ஒரு சி.டி.எம்.ஏ. என மூன்று சிம்களை இயக்கக்கூடிய கைபேசியாக Intex In 5030 வெளிவந்துள்ளது.
ஒரு ஜி.எஸ்.எம். சிம் இயங்குகையில் சி.டி.எம்.ஏ. சிம் இணைப்பும் இயங்கக்கூடியதாக இதன் தொழில்நுட்பம் அமைந்துள்ளது. இரண்டிலும் அழைப்புக்கள் வந்தாலும் மாற்றி மாற்றிப் பேசிக்கொள்ளலாம். ஒருவேளை கைபேசியை எங்காவது தொலைத்துவிட்டீர்களென்றால் அதனைத் தேடிக் கண்டறியும் MobileTracker தொழில்நுட்பத்தையும் இது கொண்டுள்ளது.
எஃப்.எம். றேடியோ, எம்.பி.3 பிளேயர், கமரா என்று, டிஜிடல் தொழில்நுட்பத்தின் அத்தனை சாத்தியங்களையும் உள்ளங்கைக்குள் சுருக்கிக்கொண்டிருக்கும் கைபேசிகள்,  இன்னுமின்னும் பல சாத்தியங்களையும் புதிது புதிதாக அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறது. ஒரு சிறிய கணினியையே தன்னுள் அடக்கியுள்ள Smart Phones உம் இப்போது அறிமுகமாகி சக்கை போடு போடுகிறது.
மிக அண்மைக்காலம் வரையில் தொலைபேசிப் பாவனையே அரிதாயிருந்த யாழ்ப்பாணத்துக்கு உலக சந்தையில் மிகப் பிந்திய இவ்வாறான கைபேசி வகைகள் எல்லாம் இப்போது தாராளமாகக் கிடைக்கிறது. Nokia, Motorola, Samsung, sony Erricson, Vodafon என்று எல்லா வகையான கைபேசி வகைகளும் இங்கே பெருகிக் கிடக்கின்றன.
Dialog, Mobitel, Huch, Edisalate எனப் பெருகிய கைபேசி சேவை வழங்குநர்களின் பரவலுக்கு மகுடனம் சூட்டுவதுபோல் Airtel நிறுவனமும் தற்போது வடமாகாணத்துக்குத் தனது சேவையை விரிவாக்கத் தொடங்கியுள்ளது. யாழ் குடாநாடெங்கும் 20க்கும் மேற்பட்ட தொலைபேசி பரிவர்த்தனை கோபுரங்களை Airtelநிறுவனம் நிர்மானித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தத் தனியார் தொலைபேசி சேவை வழங்குநர்களுக்கிடையிலான போட்டி காரணமாக, பாவனையாளர்களுக்குக் குஷிதான்.  அழைப்புக் கட்டணங்கள் வீழ்ச்சியடைந்துவரும் அதேவேளை, GPRS, Broadband,Wifi வசதிகளும் இதனால், மிகக் குறைந்த கட்டணங்களில் பாவனையாளர் கைசேர்கிறது.
Airtel நிறுவனம் மொபைல் தொலைக்காட்சி சேவையையும் விரைவில் வழங்கவிருப்பதாகவும் ஒரு கதை அரசல்புரசலாக இப்போது வெளியாகியிருக்கிறது,
கைபேசிகளின் இந்தப் பரவலால் அது இப்போது மனிதர்களின் ஆறாவது விரலாகிவிட்டது.
வரமா? சாபமா?
இந்தளவுக்கு எம்மிடையே பரவலாகியிருக்கும் கைபேசிப் பாவனை, உலகளவில் சாத்தியமாகியிருக்கும் அனைத்து நவீன தொழில்நுட்ப வசதிகளையும் எம் கைசேர்த்திருப்பது ஒரு வரமேயாயினும், கூடவே கைபேசிப் பாவனை புதிய சில சிக்கல்களையும் கொண்டுவந்துள்ளது. நீண்டகாலமாக இல்லாதிருந்து இப்போது திடீரெனப் பரவியிருக்கும் இந்த மொபைல் மேனியா, சிறு குழந்தைகள் முதல் பாட்டன் பாட்டியர் வரையில் அனைவரது கைகளிலும் தவழ்கிறது.
தொழில்நுட்பம் இந்தளவுக்கு எங்களுக்குக் கைவரப்பெற்றிருக்குமளவுக்கு, எதை, எதற்கு, எப்படி நாகரீகமாகப் பயன்படுத்துவது என்பது சரியாக வரவில்லை. பொது இடங்களில் பெண்களைப் படம் எடுப்பதும், வீடியோ பிடிப்பதும், ஆபாசக் காட்சிகளை பரிமாறுவதும் என்று, வரத்தைச் சாபமாக்கும் காரியங்கள் நிறையவே இங்கு நடந்தேறுகின்றன.
இவ்வாறு, நவீன தொழில்நுட்பம் நமக்கு வரமளித்திருக்கும் பல சாத்தியங்களையும் சாபங்களாக்காமல் சரிவரப் பயன்படுத்துவதே நமக்கும், பிறருக்கும் – இந்தத் தொழில்நுட்பங்களைக் கண்டுபிடித்தவர்களுக்கும் – செய்யும் கைங்கரியமாகும்.